10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 9 மாணவிகள் முதலிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.
இதில் 498 மதிப்பெண்கள் பெற்று 9 மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர்.497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை 52 பேர் பெற்றுள்ளனர்.496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை 137 பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காடு...
மொத்தம் : 89% தேர்ச்சி
மாணவர்கள்:83.4% தேர்ச்சி
மாணவிகள் :92% தேர்ச்சி
மாணவர்கள்:83.4% தேர்ச்சி
மாணவிகள் :92% தேர்ச்சி
மாவட்ட அளவில்....
1. கன்னியாகுமரி மாவட்டம் : 97.29 %
2. தூத்துக்குடி மாவட்டம்: 95.42%
3. ஈரோடு மாவட்டம் : 95.36%
2. தூத்துக்குடி மாவட்டம்: 95.42%
3. ஈரோடு மாவட்டம் : 95.36%
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வசதியாக 4 இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
www.smschoicegroup.blogspot.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறியலாம்.
இதுதவிர செல்போன்களில் எஸ்.எம்.எஸ். மூலம் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ள TNBOARD என டைப் செய்து இடைவெளி விட்டு, உங்கள் பதிவெண்ணை டைப் செய்து பின்னர் உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை டைப் செய்து, 09282232585 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment